முகப்புகோலிவுட்

‘புலனாய்வு’ செய்ய புறப்படும் அரவிந்த் சுவாமி !

  | June 18, 2019 16:14 IST
Pulanaivu Movie

துனுக்குகள்

  • இப்படத்தை சன்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்குகிறார்
  • டி.இமான் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்
  • வி.மதியழகன் இப்படத்தை தயாரிக்கிறார்
வி.மதியழகன் தயாரிப்பில் அரவிந்த் சுவாமி நடிக்கும் படம் ‘புலனாய்வு'. இப்படத்தை எழுதி இயக்குகிறார் சன்தோஷ் பி. ஜெயக்குமார்.
 
செக்கச்சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து அரவிந்த் சுவாமி கள்ளபார்ட், சதுரங்க வேட்டை 2, வனங்காமுடி, நரகாசூரன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
இப்படங்களை தொடர்ந்து தற்போது பி.ஜெயக்குமார் இயக்கும் புலனாய்வு படத்தில் நடிக்கிறார். புலனாய்வு திரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் அரவிந் சாமிக்கு ஜோடியாக நடிப்பவர் மற்றும் துணை நடிகர்கள் குறித்து விரைவில் செய்திகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  டி.இமான் இசை அமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்க்கி பாடல்கள் எழுதியிருக்கிறார்.. 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்