முகப்புகோலிவுட்

நேரடியாக OTT-ல் வெளியாகும் ஆர்யாவின் ‘டெடி’..?

  | July 04, 2020 15:18 IST
Teddy

இப்படத்தில் சாக்‌ஷி அகர்வால், சதிஷ், கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்', கீர்த்தி சுரேஷின் ‘பென்குயின்' ஆகிய பிரபலமான திரைப்படங்கள் முன்னனி OTT தளங்களில் வெளியாகு நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து, பல வெவ்வேறு திரைப்படங்கள் வரிசையாக OTT தளங்களில் வெளியீட்டை அறிவித்துள்ளன.

இந்நிலையில், ஆர்யா மற்றும் சாயிஷா நடித்துள்ள ‘டெடி' திரைப்படமும் அடுத்ததாக OTT தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் ஆகிய திரைப்படங்களை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘டெடி'. ஆர்யாவுக்கு அடுத்ததாக இந்த படத்தில் டெடி பியர் பொம்மை முக்கிய கதாபாத்திரமாக அமைந்துள்ளது. மேலும், ஆர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவியும், நடிகையுமான சாயிஷா நடித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் சாக்‌ஷி அகர்வால், சதிஷ், கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை ஸ்டூடுயோ க்ரீன் பேனரின் கீழ் KE ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்துக்கு எஸ். யுவா கேமரா வேலைகளைப் பார்க்க டி. சிவநந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்துக்கு டி. இமான் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர் மட்டும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com