முகப்புகோலிவுட்

கார்த்தி, மோகன்லால், ஆர்யா, யாஷ் & ராணா இணைந்து வெளியிட்ட ‘சக்ரா’ ட்ரைலர்.!

  | June 27, 2020 22:00 IST
Chakra

இந்த படத்தில் ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எம்.எஸ் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் 'சக்ரா'. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக வெகு நாட்கள் கழித்து மீண்டும் புன்னகை அரசி கே.ஆர். விஜயா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக நடிக்கும் விஷாலே தனது 'விஷால் பிலிம் பேக்டரி' மூலம் இந்த படத்தைத் தயாரித்து வருகிறார்.

சைபர் கிரைம் கதைக்களத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலரை தமிழில் நடிகர் கார்த்தி மற்றும் ஆர்யா, தெலுங்கில் ராணா டகுபதி, மலையாளத்தில் மோகன்லால் மற்றும் கன்னடத்தில் யாஷ் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் வெள்யிட்டுள்ளனர்.. நான்கு மொழிகளிலும் இந்த ட்ரைலர் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com