முகப்புகோலிவுட்

‘இந்தியன் 2’ படத்தில் ஆர்யா, கதை இதுதானா…..?

  | February 01, 2019 14:54 IST
Indian 2

துனுக்குகள்

  • இந்தியன் 2 படத்தில் கமல் நடித்து வருகிறார்
  • இந்தியன்-2 படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
  • அனிருத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்
சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘இந்தியன்'. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது சங்கர் இயக்கி வருகிறார்.
 
‌இந்த படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சிம்பு இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி அதன் பின் அந்த கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிப்பதாக உறுதியானது. மேலும் அக்‌‌ஷய் குமார், அஜய் தேவ்கன் போன்றோருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.
 
மேலும் கமல், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
 
சமீபத்தில் இதுதொடர்பாக படக்குழுவினர் கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் சேனாதிபதி வேடத்தில் நடிக்கும் காட்சிகள் தான் படமாக்கப்பட்டு வருகின்றன.  முதல் பாகத்தில் வெளிநாட்டுக்கு சென்ற அவர் 22 ஆண்டுகளுக்கு பிறகும் இந்தியா லஞ்சம், ஊழலில் சிக்கி தவிப்பதால் மீண்டும் தாய்நாட்டிற்கே திரும்புகிறார். இதில் அவர் ‘ஒரு வேடமா, 2 வேடங்களா என்று இப்போது கூற முடியாது. ஆனால் தாய் நாடு திரும்பும் அவர் இளைஞர்களை திரட்டி ஊழல், லஞ்சத்துக்கு எதிராக போராடுவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்க ஆர்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்