முகப்புகோலிவுட்

ஆர்யாவின் “மகாமுனி” படத்தித்தின் முக்கிய அறிவிப்பு!

  | July 24, 2019 13:26 IST
Arya Magamuni Movie

துனுக்குகள்

  • மௌன குரு படத்திற்கு பிறகு சாந்தகுமார் இயக்கும் இரண்டாவது படம் இது
  • இப்படத்தில் மகிமா நம்பியார், இந்துஜா இரு கதாநாயகிகள் நடிக்கிறார்கள்
  • ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்
`கஜினிகாந்த்' படத்தை தொடர்ந்து ஆர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘மகாமுனி. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் இந்துஜா நடிக்கிறார்.
 
 சாந்தகுமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஜூனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இப்படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
 
அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார்.  இந்த அதிகாரப்பூர்வ தகவலை ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்