முகப்புகோலிவுட்

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா?

  | September 09, 2019 12:28 IST
Pa.ranjith

துனுக்குகள்

 • மகாமுனி படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
 • ஆர்யா அடுத்து பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்
 • தினேஷ் மற்றும் கலையரசன் இந்த படத்தில் இணையவுள்ளனர்
கே.ஞானவேல் ராஜா தயாரிப்பில் ‘மௌனகுரு' படத்தை இயக்கிய சாந்த குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மகாமுனி'. இந்த படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார், இந்துஜா இன்னும் பலர் நடித்துள்ளனர்.
 
இந்த வெற்றிப்படத்தை அடுத்து நடிகர் ஆர்யா அடுத்து ஒரு தரமான கதைகளம் கொண்ட படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை ‘காலா', ‘கபாலி' உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்த வெற்றி இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கவிருக்கிறாராம். மேலும் இப்படம் பாக்ஸிங் போட்டியை மையப்படுத்தி எடுக்கப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.
 
மகாமுனி படத்தின் வெற்றி களிப்பு அடுங்குவதற்குள் அடுத்து சமூக அக்கரையுள்ள படைப்பாளியுடன் கைகோர்க்கவிருக்கிறார் ஆர்யா. மேலும் இந்த படத்தில் தினேஷ் மற்றும் கலையரசன் இணையவுள்ளார்களாம். விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பர்க்கப்படுகிறது. இயக்குநர் பா. இரஞ்சி மண் உரிமை போராளி பிர்ஸா முண்டா வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com