முகப்புகோலிவுட்

"சிரமத்தைத் தாங்கி ஒத்துழைப்போம்" - நீடிக்கப்பட்ட லாக் டவுன், கஸ்தூரி சொல்லும் மெசேஜ்..!!

  | June 30, 2020 08:25 IST
Lock Down 6.0

துனுக்குகள்

 • வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், அனைத்து கல்வி
 • அரசின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி
 • நாம் ஏற்படும் சிரமத்தைத் தாங்கி ஒத்துழைக்க வேண்டும், நிலைமை கடுமையானதாக
தமிழகத்தில் ஊரடங்கை  ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு  நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள், நகர்ப்புற வழிபாட்டுத் தலங்களிலும், பெரிய வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களின் வழிபாட்டுக்கான தடை நீடிக்கிறது. 
நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு  போன்ற சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. 

வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான தடை நீடிக்கிறது.  இருப்பினு ம் ஆன்லைன் கல்வி முறை தொடரும். பெரு நகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு,  மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு ஜூலை 5-ம்தேதி வர நீடிக்கும். 

தற்போது அரசின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, "நாம் கணித்ததை போலவே அரசு இந்த ஊரடங்கை நீடித்துள்ளது. ஜூலை 15ம் தேதிக்கு பிறகு சில தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. நாம் ஏற்படும் சிரமத்தைத் தாங்கி ஒத்துழைக்க வேண்டும், நிலைமை கடுமையானதாக உள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com