முகப்புகோலிவுட்

தெலுங்கில் ரீமேக்காகும் ஹிட் திரைப்படம் ’ஓ மை கடவுளே’

  | March 21, 2020 14:53 IST
Oh My Kadavule

இப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி முக்கியமான கதாப்பாத்திரத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.

அஷோக் செல்வன் ரித்திகா சிங் நடிப்பில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியான திரைப்படம் ‘ஓ மை கடவுளே'. இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். சின்னத்திரை பிரபலமான வாணி போஜன் இப்படத்தின் மூலன் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இப்படத்தில் ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி முக்கியமான கதாப்பாத்திரத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். ரொமாண்டிக்-காமெடியான இப்படம் ரசிகர்களைடையே நல்ல வரவேற்பைப் பெற்று எதிர்பாராத வெற்றி பெற்றது.

தற்போது, இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தோலிவுட்டிலும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்துவே இயக்கவுள்ளாராம். மேலும், அஷோக் செல்வனும் இப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும் கதாநாயகனாக அறிமுகமாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில், இப்படம் குறித்த அதிகார்ப்பூர்வ தகவ்ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அபினயா செல்வத்தின் ‘ஹேப்பி ஹை' உடன் இணைந்து ஜி தில்லிபாபுவின் ‘ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி' தயாரித்து, இப்படத்தை ‘சக்தி ஃபில்ம் ஃபேக்டரி' வெளியிட்டது. இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். விது அய்னா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com