முகப்புகோலிவுட்

'கைதி'யை தொடர்ந்து ‘ஓ மை கடவுளே’ படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்.!!

  | August 04, 2020 20:51 IST
Iifft

இந்த IIFFT-ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘கைதி’ திரைப்படமும் திரையிடலுக்கு தேர்வானது குறிப்பிடத்தக்கது.

அறிமுக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், விஜய் சேதுபதி, ரமேஷ் திலக் மற்றும் ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இந்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியான திரைப்படம் ‘ஓ மை கடவுளே'.

2017-ஆம் ஆண்டு வெளியான ‘கூட்டத்தில் ஓருவன்' படத்திற்கு பிறகு, 3 ஆண்டுகள் கழித்து அஷோக் செல்வனுக்கு அமைந்த இப்படம், திரைக்கு வந்து பெரும் வெற்றி பெற்றது.

‘ஓ மை கடவுளே' நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று மற்றும் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர்ஹிட்டாக அமைந்தது. இப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இப்போது, ஒரு இனிமையான செய்தி என்னவென்றால், இந்த ஆண்டு டொராண்டோவில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் (IIFFT) ‘ஓ மை கடவுளே' படம் திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த மகிழ்ச்சியான செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துகொண்ட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து “சரி நண்பர்களே!! முதல் படம், முதல் சர்வதேச அங்கீகாரம்!! மிகவும் உள்ளடக்கம்! நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்!! பார்வையாளர்களுக்கு நன்றி!!” எனக் கூறியுள்ளார்.

இந்த டொராண்டோ சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘கைதி' திரைப்படமும் திரையிடலுக்கு தேர்வானது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com