முகப்புகோலிவுட்

தனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' - களமிறங்கி கலக்க இருக்கும் குட்டி நடிகர் அஸ்வந்த்..!

  | September 19, 2020 08:49 IST
Jagame Thandhiram

துனுக்குகள்

 • தனுஷ் ஒரு அரிய திறமை கொண்டவராகவும் மற்றும் தனது மாறுபட்ட நடிப்பால்
 • கடைசியாக பொங்கல் வெளியீடான ‘பட்டாஸ்' திரைப்படத்தில் காணப்பட்ட அவர்
 • இந்நிலையில் இந்த படத்தில் இணைந்துள்ள புதிய பிரபலம் குறித்த தகவல் தற்போது
தனுஷ் ஒரு அரிய திறமை கொண்டவராகவும் மற்றும் தனது மாறுபட்ட நடிப்பால் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட வளர்ச்சி பெற்ற கதாநாயகனாகவும் வலம் வருகிறார். 18 ஆண்டுகளுக்கு முன்பு ‘துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் சினிமா உலகில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர் இப்போது 40 படங்களைக் கடந்து அசைக்கமுடியாத தூணாக நிற்கிறார். அவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரும் ஆவார்.

கடைசியாக பொங்கல் வெளியீடான ‘பட்டாஸ்' திரைப்படத்தில் காணப்பட்ட அவர், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது ‘ஜகமே தந்திரம்' வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். முன்பு அறிவித்ததை போலவே கடந்த ஜூலை 28ம் தேதி காலை ‘ஜெகமே தந்திரம்' படத்தில் இருந்து ரகிட ரகிட ரகிட என்ற பாடல் வெளியானது. வெளியான கையேடு படு வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தில் இணைந்துள்ள புதிய பிரபலம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் பிரபலமான 'ராசுக்குட்டி' ஜகமே தந்திரம் படத்தில் இணைந்துள்ளார். குழந்தை நட்சத்திரமான அஸ்வந்த் அசோக்குமார் சண்டக்கோழி 2 படத்தின் மூலம் திரையுலக பிரவேசம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com