முகப்புகோலிவுட்

“விருதுக்காக நடிச்சதும் இல்ல கிடைக்கலனு துடிச்சதும் இல்ல” – தனுஷ் பேச்சு!

  | August 29, 2019 13:22 IST
Dhanush

துனுக்குகள்

 • அசுரன் படம் அக்டோபர் 4ல் வெளியாக இருக்கிறது
 • ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்
 • வெற்றிமாறன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் ‘அசுரன்'. ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கும் இந்த படத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், பசுபதி, டிஜே, இன்னும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் அக்டோபர் 4ல் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
 
இவ்விழாவில் தனுஷ் பேசும் போது,
 
வெற்றிமாறனால் வடசென்னை படத்தைவிட பெஸ்ட்டா ஒரு படத்தை கொடுக்க முடியுமா என்று நினைத்தேன். இப்போது ‘அசுரன்' மாதிரி ஒரு படத்தை கொடுக்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. இந்த படம் முழுக்க நம்பிக்கையினால் உருவானது. தயாரிப்பாளர் என்மீதும் வெற்றிமீது வைத்த நம்பிக்கை. வெற்றி என் மீது வைத்த நம்பிக்கை. எனக்கு பெஸ்ட்ட மட்டும்தான் வெற்றி கொடுப்பார் என்று நான் அவர் மீது வைத்த நம்பிக்கை இதுதான் இந்த படம் உருவாக காரணம் என்று நான் நினைக்கிறேன்.அசுரன் படம் எனக்கு முக்கியமான படமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
 
இந்த ஆண்டு தேசிய விருது கிடைக்கவில்லையே என்று நிறையபேர் கவலை பட்டார்கள் நாங்களும் கவலைப்பட்டோம். வமசென்னைக்கு கிடைக்கவில்லையே என்று அல்ல, நாங்கள் ஏற்கனவே வாங்கிவிட்டோம். நாங்கள் கவலைப்பட்டது மேற்கு தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள், போன்ற படங்களுக்கு கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டோம்.
 
நாங்கள் விருதுகளை என்னி படம் பண்ணுவது கிடையாது.படம் மக்களுக்கு பிடித்தால் சரி.அந்த் கவுரம் எங்களுக்கு கிடைத்து விட்டது. அதுவே எங்களுக்கு மிகப்பெரிய விருதுதான். விருது கிடைக்கவேண்டும் என்று நான் நடிச்சதும் இல்லை, கிடைக்கவில்லையே என்று துடிச்சதும் இல்லை.
 
 
இந்த படத்திற்காக எல்லோரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். நிச்சயமாக இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்.
 இப்போதெல்லாம் ஒரு தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்குவது எளிதாம விஷயமல்ல. என்னை பலபேர் ஏமாத்தியிருக்கிறார்கள். ஆனால் அசுரன் படம் தொடங்கும் முன்பாகவே முழு சம்பளத்தையும் என்னிடம் கொடுத்தார் தயாரிப்பாளர் தாணு. அவர் கொடுத்த பணம் அப்போது எனக்கு முக்கியமாக இருந்தது. மஞ்சுவாரியர் ஒரு சிறந்த நடிகை அவர் அவ்வளவு நேர்த்தியாக நடித்து கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் ரொம்ப நல்லாவே பண்ணி இருக்காங்க. மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் இந்த படம் வெளியீட்டிற்காக காத்திருக்கிறேன். என்றார்.
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com