முகப்புகோலிவுட்

100 கோடி வசூல் ஹீரோ பட்டியலில் தனுஷ்! “அசுரன்” படத்தின் அசுர வசூல் விவரம் இதோ

  | October 15, 2019 14:40 IST
Asuran

துனுக்குகள்

  • முதல் முறையாக தனுஷ் படம் 100 கோடி வசூல் சாதனை செய்துள்ளது
  • அசுரன் படம் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
  • கலைபுலி எஸ்.தானு இந்த தகவலை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
வெற்றிமாறன்(Vetrimaran) இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘அசுரன்'(Asuran) படம் தனுஷின் தமிழ் திரையுலக பயணத்தில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
 
வடசென்னை படத்தை அடுத்து இயக்குநர் வெற்றி மாறன் ‘வடசென்னை' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எழுத்தாளர் பூமணியின் சிறப்பான நாவல்களில் ஒன்றான ‘வெட்கை' நாவலை அடிப்படையாக வைத்து ‘அசுரன்' படத்தை இயக்கினார்.
 
‘பொல்லாதவன்', ‘ஆடுகளம்', ‘வடசென்னை' ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றிமாறன் தனுஷ்(Dhanush) கூட்டணி ‘அசுரன்' படத்தில் இணைந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இப்படத்தில் மலையாள பிரபலம் மஞ்சுவாரியர், அம்மு அபிராமி, கருணாஸ் மகன் கென், பாடகர் டீ,ஜே, பசுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய பங்காற்றினர்.
 
சமூகத்தில் நிலவும் சாதிய பிரச்னைகளோடு தொடர்புடைய பஞ்சமி நில மீட்பு பிரச்னை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியா முழுவதும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இப்படம் தனுஷின் தமிழ் திரையுலக பயணத்தில் முக்கியமான ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா முழுவதும் திரையிடப்பட்ட இப்படம் திரையரங்கு, சேட்டிலைட், ஆடியோ என மொத்தமாக 100 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. தனுஷ் நடிப்பில் 100 வசூல் சாதனை நிகழ்த்திய முதல் படம் இதுவே. இதன் மூலம் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை நிகழ்த்தும் நடிகர்கள் பட்டியலில் தனுஷ் இணைந்துள்ளார். இதனை இப்படத்தின் தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தானு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை தனுஷ் ரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்