முகப்புகோலிவுட்

“அசுரன்” படத்தில் “ராட்சன்” பிரபலம்! அசுரன் படத்தின் புதிய அப்டேட்!

  | August 19, 2019 18:45 IST
Asuran

துனுக்குகள்

  • அக்டோபர் 4ல் இப்படம் வெளியாக இருக்கிறது
  • இப்படத்தில் குரு சோம சுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
  • வெக்கை நாவலை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது
வடசென்னை படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘அசுரன்'. பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது. தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.  பொல்லாதவன் படத்தைத் தொடர்ந்து ஜீ.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். கலைப்புலி எஸ்.தானு தயாரிக்கும் இப்படம் அக்டோபர் 4ம் தேதி வெளியாக இருக்கிறது.
 
இப்படத்தில் பாலாஜி சக்திவேல், பசுபதி, யோகிபாபு, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், குரு சோமசுந்தரம், கென் கருணாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் ராட்சன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து கவனம் பெற்ற அம்மு அபிராமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனை உறுதி செய்யும் விதத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெற்றிமாறனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் அம்மு அபிராமி ‘அசுரன்' படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி என்று பதிவிட்டிருக்கிறார்.
 
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்