முகப்புகோலிவுட்

வெற்றிமாறனின் ‘அசுரன்’ படம் எப்போது ரிலீஸ்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

  | August 08, 2019 18:18 IST
Asuran

துனுக்குகள்

 • அசுரன் படம் மூலம் முதல் முறையாக தமிழில் அறிமுகமாகிறார் மஞ்சுவாரியர்
 • இப்படம் வெட்கை என்கிற நாவலின் அடிப்படையில் இப்படம் உருவாகி இருக்கிறது
 • கலைப்புலி எஸ்.தானு இப்படத்தை தயாரித்து இருக்கிறார்
கலைபுலி எஸ்.தானு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘அசுரன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வடசென்னை படத்தைத் தொடர்ந்து தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் அடுத்து உருவாகி வரும் படம் ‘அசுரன்'. இந்த படம் ‘வெக்கை' என்கிற நவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுவரும் படம்.
 
 
ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து வருகிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பசுபதி இன்னும் பலர் நடித்துள்னர்.
 
கிட்டதட்ட படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெறுங்கியுள்ள இப்படத்தின் இசை பாடல் வேலைகளை துரிதமாக கவனித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ் இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்ரமாக அறிவித்துள்ளது படக்குழு, அதன்படி இப்படம் வரும் அக்டோபர் 4ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com