முகப்புகோலிவுட்

ஆயிரம் தியேட்டர்களில் ‘அசுரன்’ அரசாட்சி!

  | September 20, 2019 19:21 IST
Dhanush

துனுக்குகள்

  • அக்டோபர் 4ல் இப்படம் வெளியாக இருக்கிறது
  • தனுஷ் வெற்றி மாறன் நான்காவது முறை அமைத்துள்ள கூட்டணி இப்படம்
  • மஞ்சுவாரியர் இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்
அக்டோபர் மாதம் 4ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது அசுரன் திரைப்படம்.
 
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களைத் தொடர்ந்து வெற்றி மாறன் தனுஷ் இருவம் அமைத்துள்ள நான்காவது கூட்டணி அசுரன். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பசுபதி, பவன், யோகி பாபு, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், குரு சோமசுந்தரம் என தேர்ந்த நடிகர்கள் இணைந்துள்ளனர். இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இசையமைப்பாளராக இந்த படத்தில் இணைந்துள்ளார் ஜிவி பிரகாஷ். அண்மையில் இந்தப் படத்தின் பாடல்கள், ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.
 
உலகம் முழுவதும் வரும் அக்டோபர் 4-ம் தேதி 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் அசுரன் வெளியாகிறது. இதில் அமெரிக்காவில் மட்டும் 110 அரங்குகளில் அசுரன் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்