முகப்புகோலிவுட்

ஆட்டத்துக்கு தயாரான “அசுரன்”; ஜி.வி. பிரகாஷ் இசையில் சூப்பர் டான்ஸ் பாடல்

  | April 01, 2019 15:47 IST
Asuran

துனுக்குகள்

 • வெற்றிமாறன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
 • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார்
 • மஞ்சுவாரியர் தமிழில் நடிக்கும் முதல் படம் இது
வடசென்னை படத்தை தொடர்ந்து தனுஷ் வெற்றிமாறன் இணைந்திருக்கும் கூட்டணி அசுரன். இந்த படத்தில் தனுஷ் தந்தை, மகன் என இரட்டை வேடமிட்டு நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷுக்கு மஞ்சு வாரியர் ஜோடியாக நடிக்கிறார். மகனாக நடிக்கும் தனுஷுக்கு கதாநாயகி தேர்வு செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கென், பவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜீ.வி.பிரகாஷ்  இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியான, ஆடுகளம், மயக்கம் என்ன படங்களுக்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
அசுரன் இந்தப் படத்தின் பாடல்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ், “அசுரன்' படத்திற்காக இரண்டு பாடல்களை முடித்துவிட்டதாகவும், அதில் ஒன்று சூப்பர் டான்ஸ் பாடல் என்றும் , இந்த பாடலுக்காக காத்திருப்பவர்களுக்கு விரைவில் ஆச்சரிய தகவல் உண்டு என்றும் கூறியுள்ளார்.      
 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com