முகப்புகோலிவுட்

அப்பாவை தொடர்ந்து மகனும் தனுஷுடன் இணைகிறார்…..

  | February 01, 2019 14:50 IST
Asuran Update

துனுக்குகள்

  • தனுஷின் திருடா திருடி படத்தில் கருணாஸ் நடித்திருந்தார்
  • பொல்லாதவன் படத்திலும் கருணாஸ் தனுஷின் நண்பராக நடித்தார்
  • இந்த படத்தை வெற்றி மாறன் இயக்குகிறார்
கடந்த ஆண்டு தனுஷ், வெற்றிமாறனின் வெற்றிக்கூட்டணியாக அமைந்த படம் வடசென்னை. இந்த படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதற்கிடையில் இவர் இருவரும் இணைந்துள்ள படம் அசுரன். பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் இப்படத்தில் நடிக்கிறார். அவருக்கு இது முதல் தமிழ் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இப்படத்திற்கு இருக்கிறது.
 
மேலும் இப்படத்தில் வேறு யார் யார் நடிக்கிறார்கள் என்று தெரியாத சூழலில், முக்கிய கதாபாத்திரத்தில் கருணாஸின் மகன் கென் கருணாசை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஏற்கனவே அழகு குட்டி செல்லம், நெடுஞ்சாலை படங்களில் நடித்தவர். மேலும் தனுஷுடன், திருடா திருடி, பொல்லாதவன் ஆகிய படங்களில் நடிகர் கருணாஸ் நடித்தது குறிப்பிடத்தக்கது.
 
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்