முகப்புகோலிவுட்

“முதல்முறையாக சூர்யாவுடன் இணையும்” அசுர இயக்குனர்..!

  | December 22, 2019 11:14 IST
Asuran

துனுக்குகள்

  • சூர்யாவின் அடுத்த படமாக ‘சூரரைப் போற்று’ வெளியாகவுள்ளது.
  • சூர்யாவின் 40-வது திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கவுள்ளார்.
  • சூர்யா40 திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார்.
அசுரன் பட வெற்றையையடுத்து இயக்குனர் வெற்றிமாறன் சூர்யாவை இயக்கவுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மஞ்சு வாரியர் இணைந்து நடித்து அக்டோபர் 4-ஆம் தேதி வெளியான படம் அசுரன். இப்படத்தில் கென் கருனாஸ், டீஜே அருணாசலம், பசுபதி, ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, இயக்குனர் பாலஜி சக்திவேல், வேல்ராஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட்டானது.

அதையடுத்து, இயக்குனர் வெற்றிமாறன், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64-ல் நடித்துவரும் விஜயுடன் இணையவுள்ளதாகப் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், ‘அசுரன்' பட தயாரிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பு தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ‘சூரரைப் போற்று' திரைப்படத்தின் வெளியீட்டூக்காக காத்திருக்கும் சூர்யாவின் 40-வது திரைப்படம் குறித்த அறிவிப்பு தான் அது. அதாவது, இயக்குனர் வெற்றிமாறன் ‘சூர்யா40' திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இந்த அறிவிப்பை அசுரன் திரைப்படத்தை தயாரித்த The V Creations கலைப்புலி எஸ். தானு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com