முகப்புகோலிவுட்

இந்தக் கொரோனாவும் சதி பண்ணுதே..!! ‘நரகாசூரன்’ஐ நேரடியாக OTT தளத்தில் வெளியிடும் கார்த்திக் நரேன்..?

  | March 23, 2020 14:48 IST
Naragasooran

கார்த்திக் நரேன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினார்.

கார்த்திக் நரேன் தனது 22 வயதில் 2016-ஆம் ஆண்டு வெளியான 'துருவங்கள் பதினாறு' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முன்னதாக சில குறும்படங்களை மட்டுமே இயக்கியிருந்த அவர், தனது முதல் படத்திலேயே பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்து, அனைவராலும் பாராட்டப்பட்டார். அடுத்த ஆண்டிலேயே 'நரகாசூரன்' படத்தைத் தனது இரண்டாவது படைப்பாக எடுத்தார். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரித்த இப்படம் இன்று வரை வெளியிடப்படவில்லை. த்ரில்லர் என்று அழைக்கப்படும் 'நரகாசூரன்' படத்தில் அரவிந்த் சுவாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா மற்றும் இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், கார்த்திக் நரேனின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 'நரகாசூரன்' திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் தளங்களில் வெளியிடப்படவுள்ளது.

இப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று காரணங்களால், 'நரகாசூரன்' மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால், இப்போது இப்படத்தை நேரடி டிஜிட்டல் வெளியீடாக மாற்ற இயக்குநர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கார்த்திக் நரேன் சமீபத்தில் 'நரகாசூரன்' ஐ நேரடியாக OTT தளங்களில் வெளியிட்டால் பார்வையாளர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்பதைப் புரிந்துகொள்ள, தனது இன்ஸ்டாகிராமில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தினார். அவரது கேள்விகளுக்கு 87 சதவீத மக்கள் ‘ஆம் என பதிலளித்துள்ளனர். இருப்பினும், கார்த்திக் நரேன் தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.
இதற்கிடையில், அருண் விஜய், பிரசன்னா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த கார்த்திக் நரேனின் படமான 'மாஃபியா: அத்தியாயம் 1' கடந்த மாதம் வெளியாகி, பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்