முகப்புகோலிவுட்

‘தள்ளிப் போகாதே’ அனுபமா., மூக்கோடு மூக்கு உரசி நிற்கும் அதர்வா..! வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்..!

  | February 18, 2020 18:24 IST
Atharva

இப்படத்தின் கதாநாயகியான அனுபமா பரமேஸ்வரனின் பிறந்த நாளான இன்று, இப்படத்தின் தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

அதர்வா அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகிவருகிறது.

ஆர். கண்ணன் இயக்கத்தில் அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இருவரும் இணைந்து புதிய திரைப்படத்தில் நடித்து வந்தனர். அப்படத்துக்கு பெயர் சூட்டப்படாமல் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என படக்குழு நேற்று அறிவித்திருந்தது.

அதேபோல், இப்படத்தின் கதாநாயகியான அனுபமா பரமேஸ்வரனின் பிறந்த நாளான இன்று, இப்படத்தின் தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு'தள்ளிப் போகாதே' தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், வெளியாகியுள்ள இப்படத்தின் முதல் பார்வையில் அதர்வாவும் அனுபமாவும் முக்கோடு மூக்கு உரசி மிக நெருக்கமாக நிற்கின்றனர். தற்போது இந்த ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த தலைப்பு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா' படத்தில் இடம் பெற்று, ஏ. ஆர் ரகுமான் இசையில் மிகவும் பிரபலமடைந்த பாடலின் முதல் வரி என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்