முகப்புகோலிவுட்

'அதர்வாவின் குருதி ஆட்டம்' - அமைதியாக வந்த அப்டேட்

  | March 26, 2020 12:42 IST
Atharvaa

துனுக்குகள்

 • மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தவர் முரளி
 • பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான
 • கொரோனா நோய் தொற்றால் தற்போது வெளியீட்டு தேதி
திரையுலகை பொறுத்தவரை நடிகர்களின் வாரிசுகள் நடிக்க வருவது இயல்பு, தற்போது தமிழ் சினிமா உலகில் பல முன்னணி நடிகர்கள் வாரிசு நடிகர்களே. அப்படி வாரிசு நடிகர்களில் இளமை துள்ளலோடு வலம்வரும் நடிகர் தான் அதர்வா. தமிழ்த் திரை உலகில் பல ஆண்டுக்காலம் கல்லூரி செல்லும் மாணவனாகத் திகழ்ந்து மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தவர் முரளி. முரளியின் இழப்பு திரையுலகில் ஈடுசெய்யமுடியாத ஒன்று என்றபோது அவருடைய மகன் அதர்வா தற்போது தனது சிறந்த நடிப்பால் அப்பாவிற்கு பெருமைத்தேடி தந்துள்ளார். 

2010ம் ஆண்டு  பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், இந்த 2020ம் ஆண்டில் தற்போது நான்கு படங்களில் நடித்து வருகின்றார். குருதி ஆட்டம், தள்ளிப்போகாதே, ஒத்தைக்கு ஒத்த மற்றும் ருக்குமணி வண்டி வருது ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். 

இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட குருதி ஆட்டம் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்த மார்ச் 1ம் தேதியே படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் படத்திற்கான பிற பணிகளும் தற்போது முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றால் தற்போது வெளியீட்டு தேதி அறிவிப்பதில் தாமதம் ஏற்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 8 தோட்டாக்கள் என்ற சிறந்த படத்தை எடுத்து திரையுலகை தன்னை திரும்பி பார்க்கவைத்த இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் இந்த  உருவாகி உள்ளது. 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com