முகப்புகோலிவுட்

‘பூமராங்’ படத்தை ஒற்றை வரியில் விமர்சனம் செய்த ரஜினி…!

  | March 08, 2019 11:08 IST
Boomerang Rajini

துனுக்குகள்

  • இப்படத்திற்கு ரதன் இசை அமைத்திருக்கிறார்
  • இப்படத்தை ஆர். கண்ணன் இயக்கி இருக்கிறார்
  • மேகா ஆகாஷ் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருகிறார்
அதர்வா நடிப்பில் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘பூமராங்'. இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக பேட்ட படத்தில் நடித்திருந்த மேகா ஆகாஷ் கல்லூரி மாணவியாக நடித்திருக்கிறார். இந்த படம் நாளை வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு ரதன் இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த ரஜினி நதிநீர் இணைப்பைப் பற்றி பேசும் படம் இது என்று பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
கிராமத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தற்போது இருக்கும் விவசாயிகளின் பிரச்னைகளை பேசுதுதான் இந்த படத்தின் கதை.

இந்த படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இப்படம் வெளியாக இருக்கிறது. திரையுலகை சேர்ந்த பலரும் இப்படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்