முகப்புகோலிவுட்

அத்திவரதரை தரிசனம் செய்த அட்லி – நயன்தாரா? வைரலாகும் புகைப்படங்கள்!

  | August 16, 2019 17:52 IST
Atlee

துனுக்குகள்

  • அத்திவரதர் கோயில் தரிசனம் இன்றுடன் முடிகிறது
  • ரஜினியைத் தொடர்ந்து அட்லி. நயன்தாரா தரிசனம் செய்துள்ளனர்
  • அட்லி இயக்கி வரும் பிகில் படத்தின் படப்பிடிப்பு நிறைவானது
காஞ்சிபுரம் அத்தி வரதர் கோயிலில்  அத்திவரதர் சாமி சிலையை காண  ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள். இது வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்க வந்து சென்றிருக்கிறார்கள் என்கிறார்கள்.  கடைசி நாளான இன்று அத்திவரதரை காண்பதற்காக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும் பலரும் சென்று வருகிறார்கள்.
 
நேற்று முன்தினம் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் சென்று வழிபட்டார். நேற்று நள்ளிரவில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் குடும்பத்தினருடன் சென்று அத்திவரதரை வழிப்பட்டார். இந்நிலையில், இன்று காலை இயக்குனர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்.
 
0u4btij

 
அட்லி தற்போது பிகில் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு டப்பிங் வேலையில் இறங்கி  இருப்பதாக செய்திகள் வெளியாகின. நயன்தாரா ‘பிகில்' படத்தின் தனது காட்சிகளை ஏற்கனவே முடித்த நிலையல் ரஜினியின் தர்பார் படத்தில் தீவிரமாக நடித்துவருகிறார். இற்றிலையில் இவர்கள் அத்திவரதர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்