முகப்புகோலிவுட்

அட்லீ-ஷாருக் கான் கூட்டணி பட லேட்டஸ்ட் அப்டேட்..!

  | August 04, 2020 11:58 IST
Atlee

பூட்டுதல் நீக்கப்பட்ட பிறகு இரு படப்பிடிப்பையும் ஒரே நேரத்தில் திட்டமிட்டுவருவதாக தெரிகிறது.

ராஜா ராணி, தெறி, மெர்சல் போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் அட்லீ, கடைசியாக விஜய், நயன்தாரா நடித்த ‘பிகில்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பாக வெளியானது மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

அட்லி அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளதாகவும், தனது அடுத்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த படத்திற்கு ‘சாங்கி' என்று பெயரிடப்படும் என்றும் கடந்த ஆண்டே அதனை அறிவிக்கப்படவிருந்ததாகவும் செய்திகள் வந்தன.

இதற்கிடையில், ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஷாருக் கான் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும், அவர் அட்லீ திரைப்படத்திலிருந்து விலகியுள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்தன.

இப்போது அட்லீ மற்றும் ராஜ்குமார் ஹிரானி ஆகிய இரண்டு பேரின் திரைப்படங்களிலும் ஷாருக் கான் நடிப்பார் என்பது தெரிய வந்துள்ளது. பூட்டுதல் நீக்கப்பட்ட பிறகு இரு படப்பிடிப்பையும் ஒரே நேரத்தில் திட்டமிட்டுவருவதாக தெரிகிறது. இந்த இரண்டு திரைப்படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஷாருக்கானின் பிறந்த நாளான நவம்பர் 2-ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com