முகப்புகோலிவுட்

நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் அட்லீயின் ‘அந்தகாரம்’

  | June 01, 2020 13:40 IST
Atlee

இப்படத்துக்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார் மற்றும் ஏ.எம். எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்ய, சத்யராஜ் நடராஜன் படத்தை தொகுத்துள்ளார். 

அர்ஜுன் தாஸ் முன்னணி வேடத்தில் நடித்த மற்றொரு படம், அறிமுக இயக்குநர் வி. விக்னராஜன் இயக்கத்தில், அட்லீ மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. ‘அந்தகாரம்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி செம வைரலானது.

Supernatural சஸ்பன்ஸ் த்ரில்லர் படமான இக்கதையில்,  ஒரு குருட்டு மந்திரவாதியாக வினோத் கிஷன், கிரிக்கெட் வீரராக அர்ஜுன் தாஸ் மற்றும் மனநல மருத்துவராக குமார் நடராஜன் நடிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கை வஞ்சம், திகைப்பு மற்றும் இருளின் வலையில் பின்னிப் பிணைந்துள்ளது. மேலும், பூஜா ராமகிருஷ்ணன், மீஷா கோஷல், ‘ஜீவா' ரவி, ‘ரெயில்' ரவி மற்றும் மஹேந்திரா முல்லத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படம் இந்த் ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்போது இந்த படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் என தெரியவந்துள்ளது. மேலும், நெட்ஃப்ளிக்ஸ் ‘அந்தகாரம்' படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பொன்மகள் வந்தாள் மற்றும் பென்குயின் படங்களுக்குப் பிறகு, அந்தகாரம் சமீபத்திய காலங்களில் நேரடி OTT வெளியீட்டைத் தேர்வுசெய்த மூன்றாவது திரைப்படமாகும். 

இப்படத்துக்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார் மற்றும் ஏ.எம். எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்ய, சத்யராஜ் நடராஜன் படத்தை தொகுத்துள்ளார். 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com