முகப்புகோலிவுட்

23ம் தேதி விசாரணைக்கு வரும் அட்லியின் தளபதி 63; விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி!

  | April 19, 2019 20:15 IST
Thalapathy 63

துனுக்குகள்

  • இப்படத்தை அட்லி இயக்கி வருகிறார்
  • குறும்பட இயக்குநர் செல்வா இந்த வழக்கை தொடுத்திருக்கிறார்
  • வரும் 23ல் இயக்குநர், தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது
தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் – அட்லி கூட்டணியில் விஜய்யின் 63வது படம் வெளியாக உருவாகி வருகிறது.
 
பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. இந்த படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றம் அதன் சுற்றுவட்டாரப்குதிகளில் விறுவிப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், குறும்பட இயக்குநர் செல்வா, தளபதி 63 படத்தின் கதை தன்னுடையது என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
 
பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து நான் 265 பக்கங்கள் கொண்ட கதையை எழுதினேன். அந்த கதையை சில தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்தேன். இந்நிலையில் அட்லி இந்த கதையை இயக்கும் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எனவே அந்த படத்தின் படப்பிடிப்புக்கு தடை விதிக்க வேண்டும்.கதை திருட்டு குறித்த இந்த வழக்கு வருகிற 23ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில்  இந்த வழக்கில் இயக்குநர் அட்லி, தயாரிப்பு நிறுவனம் மற்றும் எழுத்தாளர் சங்கத்தை எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
பாதி படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் வரும் 23ம் தேதி வழக்கு என்னவாகப்போகிறது என்று விஜய் ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர். தற்போது இந்த பிரச்னை விஷ்வரூபம் எடுத்திருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்