முகப்புகோலிவுட்

தனுஷின் 3-வது ஹிந்தி படம் கன்ஃபார்ம்..!

  | January 30, 2020 14:34 IST
Dhanush

துனுக்குகள்

  • தனுஷின் 3-வது ஹிந்தி படத்துக்கு ‘அட்ராங்கி ரே’ என தலைப்பிடப்பட்டுள்ளது
  • இப்படத்தை ஆனந்த் எல். ராய் இயக்குகிறார்.
  • இப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
தனுஷ் அடுத்ததாக சாரா அலி கான், அக்‌ஷய் குமாருடன் இணைந்து தனது 3-வது ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார்.

நடிகர் தனுஷ், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ராஞ்சனா திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். அதையடுத்து அமிதாப் பச்சனுடன் இணைந்து ஷமிதாப் திரைப்படத்தில் நடித்தார். இந்நிலையில், ஹிந்தியில் தனது 3-வது படத்தை கம்ஃபார்ம் செய்துள்ளார் தனுஷ்.

அவர் மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நடிக்கிறார். ‘அட்ராங்கி ரே' (Atrangi Re) எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சாரா அலி கான் நடிக்கிறார். மேலும், ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் ஸ்டார் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். இப்படத்துக்கு ஏ. ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், தற்போது சாரா அலி கான் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகிவருகிறது. சாராவின் வலது கன்னத்தில் அக்‌ஷய், இடது கன்னத்தில் தனுஷ், அட் எ டைமில் முத்தம் வாங்கும் சாரா, மகிச்சியுடன் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.
மேலும், தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளார். இப்படம், 2021-ஆம் ஆண்டின் காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்