முகப்புகோலிவுட்

அட்ட கத்தி தினேஷ் நடிப்பில் ‘நானும் சிங்கிள் தான்’! காமெடி கலந்த காதல் கதை!!

  | August 10, 2019 16:21 IST
Attakathi Dinesh

துனுக்குகள்

 • அறிமுக இயக்கநர் கோபி என்பவர் இப்படத்தில் நடிக்கிறார்
 • படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானின் உதவியாளர் ஹித்தேஷ் மஞ்சுநாத் இசை அமைக்கிறார்
 • படப்பிடிப்பு சென்னை மற்றும் லண்டன், யூரோப் போன்ற இடங்களில் நடக்கிறது
அறிமுக இயக்குநர் கோபி என்பவர் இயக்கும் புதிய படத்தில் ‘அட்ட கத்தி' தினேஷ் நாயகனாக நடிக்கிறார். ‘தேர் இஸ் ய கம்பெனி' என்கிற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் திணேஷுக்கு ஜோடியாக தீப்தி திவேஸ் நடிக்கிறார். இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ‘நானும் சிங்கிள் தான்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
 இது முழுக்க முழுக்க காதல், கமர்ஷியல் படம். வித்தியாசமான திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் கோபி. ஒரு புது மாதிரியான கிளைமாக்ஸ் காட்சி இந்த படத்தில் உள்ளது அது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக நிச்சயம் இருக்கும். லண்டனில் இருக்கும் தமிழ் டான் கதாபாத்திரத்தில் நடித்து  மொட்ட ராஜேந்திரன் காமெடியில் கலக்கி இருக்கிறார். இந்த படம் ரசிகர்களுக்கு அருமையான காமெடி விருந்தாகவும் இருக்கும். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார் தயாரிப்பாளர் ஜெயகுமார்.
 
 படப்பிடிப்பு சென்னை மற்றும் லண்டன், யூரோப் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. டேவிட் ஆனந்த்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஹித்தேஷ் மஞ்சுநாத் இசை அமைக்கிறார். இவர் ஏ.ஆர்.ரகுமானிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com