முகப்புகோலிவுட்

விக்ரம் சுகுமாரனுடன் இணையும் ‘அட்ட கத்தி’ தினேஷ்..! டைட்டில் லுக் வெளியானது..!

  | February 22, 2020 08:20 IST
Therum Porum

துனுக்குகள்

  • இப்படத்துக்கு 'தேரும் போரும்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
  • இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார்.
  • இப்படத்தை நல்லு சாமி பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

‘அட்ட கத்தி' தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

தாய் சரவணனின் நல்லு சாமி பிக்சர்ஸ் தாயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படைப்பு பற்றிய தகவல்களை நேற்று வெளியிட்டது. அதையடுத்து, இப்படத்தில் இணைந்துள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் முன்னணி கதாபாத்திரத்தின் விவரங்களை ஒவ்வொன்றாக நேற்று வெளியிட்டது. மேலும், இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இன்று காலை வெளியிடுவதாகவும் அறிவித்திருந்தது.

வெளியான அறிவிப்புகளின் படி, நல்லு சாமி பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘மதயானைக் கூட்டம்' படப் புகழ் விக்ரம் சுகுமாரன் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் தினேஷ். இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்யவுள்ள இப்படத்துக்கு ராஜீவன் கலை இயக்கமும், எம் சுகுமார் ஒளிப்பதிவும் செய்கின்றனர். மேலும் அருள் தாஸ் மற்றும் கார்த்திக் துரை படக்குழுவில் இணைந்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு ‘தேரும் போரும்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு வெகு விரைவில் துவங்கப்படவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. தினேஷ் மற்றும் விக்ரம் சுகுமாரின் இந்த கூட்டணி திரைப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்