முகப்புகோலிவுட்

"அனைவரும் என்னிடம் பேசிவிட்டார்கள். எனவே.." - 'கிறுக்கல் மன்னன்' போட்ட ட்வீட்..!

  | August 30, 2020 09:04 IST
Parthiban

துனுக்குகள்

 • இந்த ஆண்டு பல திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரிதும் பாராட்டப்பட்டன
 • நேர்காணலில், அசலில் பிஜு மேனன் ஆற்றிய பாத்திரத்தில் பார்த்திபனைப்
 • இச்செய்தி நற்செய்தி ஆகலாம்.! ஆனால் இதுவரை தயாரிப்பாளர்
இந்த ஆண்டு பல திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரிதும் பாராட்டப்பட்டன, அவ்வாறு பாராட்டப்பட  பிளாக்பஸ்டர் ஹிட்டான ஒரு மலையாள திரைப்படம் தான் ‘அய்யப்பனும் கோஷியும்'. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவை அணுகியிருப்பதாக அண்மையில் கோலிவுட்டில் பரபரப்பாக ஒரு தகவல் வளம்வருகிறது. அதே சமயம் இந்த படத்தில் கார்த்திக் மற்றும் பிரபல இயக்குநரும் நடிகருமான திரு. பார்த்திபன் இணையவுள்ளதாக தகவலும் வெளியாகி வருகின்றது. 

அய்யப்பனும் கோஷியும் அசல் இயக்குனர் சச்சி சமீபத்தில் காலமானார். அவர், இறப்பதற்கு முன்னர் ஒரு நேர்காணலில், அசலில் பிஜு மேனன் ஆற்றிய பாத்திரத்தில் பார்த்திபனைப் பார்க்க விருப்பம் தெரிவித்திருந்தார். அதே சமயம் சமீபத்தில், பார்த்திபன் ஒரு திரைப்படத்தில் விரைவில் சிம்புடன் சேர்ந்து பணியாற்றுவது போன்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படம் குறித்து வெளியான செய்திக்கு அவர் பாணியில் மர்ம முடிச்சுகளோடு ஒரு பதிலை கொடுத்துள்ளார் பார்த்திபன். அவர் வெளியிட்ட பதிவில் "இச்செய்தி நற்செய்தி ஆகலாம்.! ஆனால் இதுவரை தயாரிப்பாளர் திரு கதிரேசனை தவிர அனைவரும் என்னிடம் பேசிவிட்டார்கள். எனவே..." என்று கூறி முடித்துள்ளார். இதில் இருந்து இந்த படம் குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது தெளிவாகிறது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com