முகப்புகோலிவுட்

மறைந்த இயக்குநர் சச்சியுடன் பணியாற்ற விரும்பிய அஜித்..?

  | June 29, 2020 22:06 IST
Sachy

இருப்பினும் 48 வயதே ஆன திரை எழுத்தாளர்-இயக்குநர் சச்சிதானந்தன் கடந்த ஜூன் 19-ஆம் தேதி அன்று காலமானார்.

தமிழ் சினிமாவின் மிகவும் விரும்பப்படும் வெகுஜன ஹீரோக்களில் ஒருவர் ‘தல' அஜித். அஜித் தற்போது தனது 60-வது படமான ‘வலிமை'யில் நடித்துவருகிறார். எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐம்பது சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு எந்த வகையிலும் ஆபத்து ஏற்படாதவாறு கொரோனா வைரஸ் தொற்றுநோய் முடிந்த பின்னரே படப்பிடிப்பை மீண்டும் தொடங்குமாறு அஜித் படக்குழுவுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

தற்போதைய பரபரப்பான சலசலப்பு என்னவென்றால், பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர் படமான ‘அய்யப்பனும் கோஷியம்' படத்தைப் பார்த்த பிறகு, தல அஜித் இயக்குநர் சச்சியை அழைத்து ஒரு படத்திற்காக அவருடன் பணியாற்ற விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இயக்குநர் சச்சியும் அஜித்துக்காக பிரத்யேகமாக ஒரு கதை யோசனையை கொண்டிருந்ததாகவும், அதை அவரிடம் விவரிப்பதில் ஆர்வமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் 48 வயதே ஆன திரை எழுத்தாளர்-இயக்குநர் சச்சிதானந்தன் கடந்த ஜூன் 19-ஆம் தேதி அன்று காலமானார். இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் சிக்கல்களைத் தொடர்ந்து, மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com