முகப்புகோலிவுட்

'நான் மீண்டும் ட்ராக்கில்..!!' - சைக்ளிங் செய்வதை மீண்டும் தொடங்கிய 'டெடி' நாயகன்

  | May 26, 2020 14:01 IST
Back On Track

துனுக்குகள்

  • கேரளாவில் பிறந்து சென்னையில் பொறியியல் பயின்று, அதன் பிறகு மென்பொருள்
  • தனது இயல்பான நடிப்பால் பல ரசிகர்களை கவரும் ஆர்யா ஒரு Fitness Freak
  • இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள்ளே இத்தனை காலம் பயிற்சிகளை
கேரளாவில் பிறந்து சென்னையில் பொறியியல் பயின்று, அதன் பிறகு மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தவர் தான் நடிகர் ஆர்யா. அதன் பிறகு 2005ம் ஆண்டு வெளியான 'அறிந்தும் அறியாமலும்' படத்தின் வழியாக திரையுலகில் அறிமுகமானார். அறிமுக படத்திலேயே Film Fare வழங்கும் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதையும் அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடிப்பில் வெளியான முதல் படம் 'அறிந்தும் அறியாமலும்' என்றபோதும் அவர் முதலில் நடிக்க ஒப்பந்தமானது உள்ளம் கேட்குமே என்ற படம் தான். இந்த படம் 2003ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2005ம் ஆண்டு வெளியானது, இதில் பிரபல நடிகை அசின் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது வரை தனது இயல்பான நடிப்பால் பல ரசிகர்களை கவரும் ஆர்யா ஒரு Fitness Freak என்பது பலரும் அறிந்ததே. ரசிகர்கள் தங்கள் செய்யும் ஒர்கவுட்களை அவரிடம் இணையத்தில் பகிர்ந்தால் அவர்கள் அனைவரையும் இவர் பாராட்ட மறந்ததில்லை. அதனாலேயே இவரை டார்லிங் என்று அழைக்கும் ரசிகர்கள் பலர்.

இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள்ளே இத்தனை காலம் பயிற்சிகளை மேற்கொண்டு வந்த ஆர்யா தற்போது மீண்டும் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கி உள்ளனர். சுமார் 50 கிலோமீட்டர் சைக்ளிங் செய்த ஆர்யா அதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com