முகப்புகோலிவுட்

"ஒர்கவுட்டில் அசத்தும் கலை" - வெறித்தமான வீடியோ வெளியிட்டு அப்டேட் சொன்ன ஆர்யா..!

  | September 18, 2020 11:54 IST
Arya

துனுக்குகள்

 • இப்படத்துக்காகக் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, தனது உடற்கட்டை
 • இந்நிலையில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும்
 • பாக்ஸிங் மற்றும் ஒர்கவுட் என்று அசத்தி வரும் கலையின் உடற்பயிற்சி காணொளி
பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய திரைப்படம் ‘சல்பேட்டா பரம்பரை'. வட சென்னையில் உள்ள இளைஞன் தனது பாக்ஸிங் கனவுகளை எப்படி நிஜமாக்கிக்கொள்கிறான் என்பதைப் பற்றிய கதையாக இப்படம் அமையவுள்ளது. மேலும் இப்படத்தில், ‘அட்ட கத்தி' தினேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்துக்காகக் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, தனது உடற்கட்டை முற்றிலுமாக மாற்றிய ஆர்யா, தனது புகைப்படங்களை “ரஞ்சித் சார் நான் ரெடி” என சில மாதங்களுக்கு முன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதையடுத்து இப்படத்திற்கான முதற்கட்ட வேலைகள் துவங்கப்பட்டது. இருப்பினும், கொரோனா தொற்று காரணமாக தொழில் நிறுத்தப்பட்டதால் படம் தாமதமானது.

இந்நிலையில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தனது படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் நடிகர் ஆர்யா. மேலும் இந்த படத்திற்காக படு ஜோராக தன்னை மெருகேற்றி வருகின்றார் நடிகர் கலை. பாக்ஸிங் மற்றும் ஒர்கவுட் என்று அசத்தி வரும் கலையின் உடற்பயிற்சி காணொளி ஒன்றை தற்போது வெளியிட்டு மகிழ்ந்துள்ளார் ஆர்யா. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது என்றும் அறிவித்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com