முகப்புகோலிவுட்

‘அவள் அப்படித்தான்’ படத்தை ரீமேக் செய்யும் பிரபல இயக்குநர்!! ஶ்ரீபிரியா வேடத்தில் ஷ்ருதி ஹாசன்..

  | June 01, 2020 13:07 IST
Aval Appadithan

சி. ருத்ரய்யா இயக்கத்தில், ஶ்ரீபிரியா, ரஜினிகாந்த், கமல் ஹாசன் நடிப்பில் 1978-ல் வெளியான திரைப்படம் ‘அவள் அப்படித்தான்’.

1978-ஆம் ஆண்டு சி. ருத்ரய்யா இயக்கத்தில், ஶ்ரீபிரியா, ரஜினிகாந்த், கமல் ஹாசன் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிப்பில் வெளியான வரலாற்று சிறப்புமிக்கத் திரைப்படம் ‘அவள் அப்படித்தான்'. இன்று வரையிலான இந்திய சினிமாவில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக இப்படம் பார்க்கப்படுகிறது.

இப்போது,  பிரபல இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இப்படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார். மேலும், மறக்கமுடியாத வகையில் நடிகை ஸ்ரீபிரியாவால் நடிக்கப்பட்ட ‘மஞ்சு' எனும் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்க ஷ்ருதி ஹாசனை தேர்வு செய்துள்ளார்.

மேலும், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் கதாபாத்திரங்களில் சிம்பு மற்றும் துல்கர் சல்மான் அல்லது விஜய் தேவரகொண்டா நடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆசியாவிலேயே முதல் திரைப்பட நிறுவனமான, சென்னையில் உள்ள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் பட்டதாரி ருத்ரய்யாவால் இயக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘அவள் அப்படித்தான்'. அதே நிறுவனத்தில் பயின்றவர் தான் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. இப்படத்தின் அசல் உரிமைகளை யார் வைத்திருக்கிறார்கள் என்று பத்ரிக்குத் தெரியாது. இதுகுறித்து அவர் ஒரு சமீபத்திய நேர்காணலில் கூறியதாவது “ருத்ராயா இப்போது இல்லை, அமெரிக்காவில் இருக்கும் அவரது மகளுக்கும் இது பற்றி தெரியும் என்று நான் நினைக்கவில்லை. நான் இப்படத்தை ஃப்ரேம் பய் ஃப்ரேம் மீண்டும் உருவாக்கப் போவதில்லை, ஆனால் இந்த திட்டத்தை எந்த இடையூறும் இல்லாமல் தொடங்க விரும்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், அவரது எல்லா படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தாலும், இப்படத்திற்காக இசையமைக்க இளையராஜாவைப் பெற விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com