முகப்புகோலிவுட்

கமல் ஹாசனுடன் இணையும் ‘பாகுபலி’ நடிகை..! வேட்டையாடு விளையாடு-2 அப்டேட்..!!

  | March 25, 2020 13:35 IST
Kamal Hassan

ஏற்கெனவே நடிகை அனுஷ்கா கவுதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்துள்ளார்.

கமல் ஹாசன் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வேட்டையாடு விளையாடு'. இப்படத்திற்கு பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. அண்மையில், கமல்ஹாசன் கவுதம் மேனனுடன் இரண்டாவது முறையாக ‘வேட்டையாடு விளையாடு-2' படத்திற்காக இணைவார் என்றும், அப்படத்தை ஐசரி கே கணேசனின் வெல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் என்றும் செய்திகள் வந்தன.

இப்போது, சமீபத்திய சலசலப்பு என்னவென்றால், ‘வேட்டையாடு விளையாடு 2' படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருந்தால், கமல்ஹாசனுடன் அனுஷ்கா நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

ஏற்கெனவே நடிகை அனுஷ்கா கவுதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை அறிந்தால்' படத்தில் நடித்துள்ளார். அதில் ‘தல' அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். எனவே, அனுஷ்கா மற்றும் கவுதம் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com