முகப்புகோலிவுட்

மணிரத்னம் படத்தில் இணைந்த “காதல்” பட இயக்குநர்!

  | August 09, 2019 19:42 IST
Mani Ratnam

துனுக்குகள்

  • மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கும் முயற்சியல் இருக்கிறார்
  • வானம் கொட்டட்டும் படத்தை மணிரத்னம் தயாரிக்கிறார்
  • பாலாஜி சக்திவேல் இப்படத்தில் இணைந்துள்ளார்
இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனசேகரன் இயக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்', இப்படத்தை மணிரத்னமே கதை எழுதி தயாரித்திருக்கிறார்.
 
வானம் கொட்டட்டும் படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க இவருக்கு சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க. நீண்ட இடைவெளிக்கு பின் சரத்குமாரும், ராதிகாவும் இணைந்து நடிக்கின்றனர். படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் வேலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்படத்தை எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் படத்தின் பணிகள் முடிவுற்ற ரிலீஸ் தேதிவை படக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்