முகப்புகோலிவுட்

'தலைவி' படத்திற்கு தடை!? நீதிமன்றத்தில் மனு அளித்த ஜெயலலிதா உறவினர்!

  | November 01, 2019 18:19 IST
Thalaivi Movie

துனுக்குகள்

 • தலைவி படத்தை ஏ.எல்.விஜய் இயக்கவிருக்கிறார்
 • ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிக்கிறார்
 • கௌதம் வாசுதேவ் மேனன் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இணைய தொடராக இயக்குகிறார்
மூத்த நடிகையும் மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கவும் இணைய தொடராக எடுக்கவும் இயக்குநர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
 
இயக்குநர் ஏ.எல்.விஜய் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி' என்கிற பெயரில் படமாக்கவிருக்கிறார். இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிப்பது உறுதியானது. மேலும் இந்த படத்திற்காக கங்கனா ரணாவத் சிறப்பு பயிற்சிகளை எடுத்து வருகிறார்.  சமீபத்தில் இந்த படத்திற்காக இவர் பரதநாட்டியம் கற்றுக்கொள்ளும் வீடியோ போட்டோ வெளியாகி வைரலானது.
 
இப்படம் 'தலைவி' என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் ஹிந்தியிலும் பெயர் வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கங்கனா ரணாவத் ஒரே பெயரில் எல்லா மொழியிலும் வெளியிடலாம் என கோரிக்கை வைத்திருந்தார். இப்படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதே போல் கெளதவ் வாசுதேவ்மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரித்து வருகிறார். இந்நிலையில், தன் அனுமதியில்லாமல் 'தலைவி' படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com