முகப்புகோலிவுட்

நடிகையானார்  பிக்பாஸ் லாஸ்லியா..! நம்ம ஹர்பஜன் சிங் தான் ஹீரோ..!

  | February 04, 2020 11:23 IST
Harbajan Singh

ஹர்பஜன் சிங் படத்துக்கு 'ஃப்ரெண்ட்ஷிப்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் தான் பிக் பாஸ் புகழ் லாஸ்லியா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் மூலம் லாஸ்லியா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பான சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். இந்தியாவில் இவரை பிடிக்காதவர் யாரும் இருக்க முடியாது. குறிப்பாக தமிழர்களுக்கு இவர் மீது மிகுந்த அன்பு உண்டு. அதற்கு காரணம் இவருக்கு தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் உள்ள ஆர்வமும் பற்றும் தான்.

இவர் தனது சமூக வளைதள பக்கங்களிலும் கூட தமிழில் தனது பதிவுகளை இடுவதில் பெயர்போனவர். நம்ம தல தோனியைப் போலவே இவருக்கும் தமிழ் ரசிகர்கள் ஏராளம். சமீபத்தில் இவர் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், அவரே ஹீரோவாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்துக்கு ஃப்ரெண்ட்ஷிப் எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் தான் பிக் பாஸ் புகழ் லாஸ்லியா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இலங்கை தமிழ் பெண்ணான லாஸ்லியாவிற்கும் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்க உள்ளனர். ஏன் லாஸ்லியா ஆர்மியே உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து நீண்ட நாட்கள் கழித்து இந்த திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகிறார் லாஸ்லியா. தற்போது இச்செய்தியை நம்ம ஹர்பஜன் மற்றும் லாஸ்லியா இருவரின் ரசிகர்களும் கொண்டாடிவருகின்றனர்.

இப்படத்தை ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கவுள்ளனர். ஒரு வேடிக்கையான பொழுதுபோக்கு எனக் கூறப்படும் இப்படத்தில் கிரிக்கெட் ஒரு முக்கிய கூறாக இருப்பதால், படத்தின் படப்பிடிப்பு அடுத்த 20 நாட்களுக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் தயாராகும் இந்த படம் இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் டப்பிங் செய்யப்படவுள்ளது. இப்படம் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் படமாகிறது.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்