முகப்புகோலிவுட்

‘தலைவன் வேற ரகம்’ அனல் பறக்கும் மோஷன் போஸ்டரை வெளியிட்ட Bear Grylls..! #ThalaivaOnDiscovery

  | February 19, 2020 13:23 IST
Bear Grylls

"இந்த மாபெரும் ஸ்டாருடன் நேரத்தை செலவு செய்ததன் மூலம் அவரின் இன்னொரு பக்கத்தை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது"

நடிகர் ரஜினிக்கு இதுவே முதல் தொலைக்காட்சி அறிமுகமாகும். மேலும், அவரே இந்த நிகச்சியில் இடம்பெறும் முதல் இந்திய நடிகரும் ஆவார்.

டிஸ்கவரி தொலைக்காட்சிக்காக சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘Into The Wild with Bear Grylls' ஷோவின் சிறப்பு மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகிவருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் முதல் முதலாக தொலைக்காட்சிக்காக நடித்துள்ள நிகழ்ச்சி தான் ‘Into The Wild with Bear Grylls'. Discovery தொலைக்காட்ச்சியில் Bear Grylls எனும் பிரிட்டிஷ் ராணுவ வீரர் தொகுத்து வழங்கி, மிகவும் பிரபலான நிகழ்ச்சி ‘Man vs Wild'. மனித நடமாட்டம் இல்லாத வனப்பகுதி, பாலைவனம் போன்ற அசாதாரன இடங்களில் சிக்கிக்கொண்டால், அங்கிருந்து எவாறு உயிர் தப்பிப்பது என்பதை செயல்முறையாக நடித்துக் காட்டும் இந்த நிகழ்ச்சி உலகம் முழுக்க பிரபலமானதாகும்.

பியர் கிரில்ஸுடன் அது போன்ற அசாதாரன இடங்களில் பயணிக்கும் விதமாக பல பிரபலங்கள் இந்த ‘Into The Wild with Bear Grylls' எனும் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு பிரதமர் மோடியுடன் ‘wild life with PM Narendra Modi' என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. அது உலகம் முழுக்க மிகவும் பிரபலமானது. அதற்கும் முன்னதாக அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹாலிவுட் நடிகர்களான மைக்கேல் பி. ஜார்டன், ஸாக் எஃப்ரான், பென் ஸ்டெல்லர் உள்ளிட்ட பலர் இது போன்ற வைல்டு லைஃப் நிகழ்ச்சியில் பேர் கிரில்ஸுடன் பங்குபெற்றுள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது ரஜினி காந்தும் நடித்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு கடந்த மாதம் கர்நாடகா மாநிலம் பண்டிபுரா வனப்பகுதியில் நடைபெற்றது. அதற்கான அதிகாரப்பூரவ தகவல்களும், புகைப்படங்களும் வெளியானது.

நடிகர் ரஜினிக்கு இதுவே முதல் தொலைக்காட்சி அறிமுகமாகும். மேலும், அவரே இந்த நிகச்சியில் இடம்பெறும் முதல் இந்திய நடிகரும் ஆவார். இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் திரைப்படத்துக்கு இணையாக எதிர்பார்த்திருக்கும் நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் மாஸான மோஷன் போஸ்டரை பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மோஷன் போஸ்டரில் ரஜினிகாந்தும், கிரில்ஸும் ஒரு மரண மாஸான ஜீப் முன்னர் நின்று போஸ் கொடுக்க, ஆக்ரோஷ இசையுடன் நெருப்புக் கொப்பளிக்க இன்ட்ரோ கொடுக்கப்படுகிறது. 

இது குறித்து கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரஜினிகாந்தின் ப்ளாக்பஸ்டர் டிவி அறிமுகத்துக்கான மோஷன் போஸ்டர் இது. நான் பல நட்சத்திரங்களுடன் வேலை செய்துள்ளேன். ஆனால், இது ஸ்பெஷல். லவ் இந்தியா” என்று #ThalaivaOnDiscovery என்கிற ஹாஷ்-டேக்குடன் பகிர்ந்துள்ளார். 
 

மேலும் அவர், “ரஜினிகாந்த் எப்போதும் ஒரு ஸ்டைலான ஆள்தான். ஆனால் காட்டில் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். இந்த மாபெரும் ஸ்டாருடன் நேரத்தை செலவு செய்ததன் மூலம் அவரின் இன்னொரு பக்கத்தை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது,” என்று சூப்பர்ஸ்டாரை புகழ்ந்துள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்