முகப்புகோலிவுட்

முதல் முறையாக பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன் இணையும் புதிய படம்…?

  | February 11, 2019 13:07 IST
Jyothika Next Film

துனுக்குகள்

  • இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் கிடைக்கவில்லை
  • இந்த படத்தில் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன் நடிக்கிறார்கள்
  • ஜோதிகா இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது
ஜோதிகா தற்போது ராஜ் என்ற புதுமுக இயக்குநர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பள்ளி ஆசிரியையாக நடித்து வரும் அவருக்கு சண்டைக் காட்சிகளும் இருக்கின்றனவாம் .
 
இந்நிலையில் ஜோதிகா அடுத்து நடிக்கும் படம் பற்றிய செய்திகள் வந்துள்ளன. தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் வருவது அரிது. எனினும் சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களம் கொண்ட படங்கள் வருகின்றன. அதன் அடிப்படையில்  கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையாக உருவாக உள்ள இந்த படத்தில் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன் மூவரும் நடிக்கிறார்கள். பாரதிராஜாவிடம் பாக்யராஜும், பாக்யராஜிடம் பார்த்திபனும் உதவி இயக்குநராக இருந்தவர்கள். முதன்முறையாக மூவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை சூர்யாவே தயாரிக்க இருக்கிறார் என செய்திகள் வெளியாகின்றன. இந்த படம் பற்றி மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க - "பார்த்திபன்-சீதா மகள் திருமணம்"

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்