முகப்புகோலிவுட்

இயக்குனர்கள் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பாரதிராஜா!

  | July 01, 2019 15:56 IST
Bharathiraja

துனுக்குகள்

 • கடந்த மாதம் இவர் தலைவர் பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • இன்று தலைவர் பதவியிலிருந்து தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்
 • இது குறித்து அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பாரதிராஜா. இந்த ராஜினாமா அறிவிப்பை அவர் இன்று ஒரு அறிக்கையின் மூலமாக அறிவித்துள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற இயக்குநர்கள் சங்க பொதுக்குழுவில், நிர்வாகிகள், இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் அனைவரும் ஒன்றுகூடி எந்த ஒரு போட்டியும் இன்றி பாரதிராஜாவை ஒரு மனதாக இயக்குனர்கள் சங்கத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுத்தனர். ஒரு மாதம் கடந்த நிலையில், இன்று அந்த பதவியிலிருந்து பாரதிராஜா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில்,"கடந்த மாதம் நடைபெற்ற நமது சங்க பொதுக்குழுவில், நமது சங்க நிர்வாகிகள், இயக்குனர்கள், துணை, இணை, உதவி இயக்குனர்கள், பேராதரவுடன் போட்டியின்றி என்னை தலைவராக தேர்ந்தெடுத்தற்கு மிகவும் நன்றி. ஆனால் தேர்தலில் போட்டியிடமால் ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகையால், ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக எனது தலைவர் பதவியை ராஜினாமா முன்வந்துள்ளேன். ஒரு மூத்த இயக்குனராக சங்க வளர்ச்சிக்கும், உறுப்பினர்களின் எதிர்கால எனது வழிகாட்டுதலும், பேரன்பும் என்றும் தொடரும்." என அவர் கூறியுள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com