முகப்புகோலிவுட்

பிக்பாஸ் ஜுலி நடிக்கும் படத்திற்கு சிக்கல்!!

  | September 17, 2019 19:12 IST
Big Boss Julie

துனுக்குகள்

 • இந்த படத்தை இயக்குநர் தயாரிப்பாளர் என இருவர் இயக்கி உள்ளனர்
 • ஒரே பெயரில் இப்படம் உருவாகிறது
 • ஜுலி இப்படத்தில் அனிதாவாக நடிக்கிறார்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மத்திய அரசு  கொண்டு வந்த நீட் தேர்வை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தியவர் அனிதா. ஆட்சியும் நீதி மன்றமும் கடைசி நேரத்தில் கைவிட தன் உயிரையே போராட்டத்தின் விதையாக விதைத்தவர் அனிதா…
 
அனிதாவின் மரணம் தமிழ்நாட்டில் பெரும் போர்களத்தை உருவாக்கியது. மாணவர்கள் மக்கள்என அனைவரையும் வீதிக்கு அழைத்துவந்து நீட் தேர்வுக்கு எதிராக போராட வைத்தது.
 
மாணவி அனிதாவின் வாழ்க்கையை 'அனிதா எம்பிபிஎஸ்' என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் வி.ராஜகணபதி ஈடுபட்டார். இதனை அஜய்குமார் என்பவர் இயக்கி வந்தார்.
 
இந்நிலையில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இந்த கதையை தனித்தனியே படமாக்கி வருகின்றனர். இந்த 2 படங்களும் ஒரே தலைப்பில் உருவாகி வருகிறது. இதனால் படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அஜய்குமார் இயக்கும் படத்தில் பிக் பாஸ் புகழ் ஜூலி நாயகியாக நடித்து வருகிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com