முகப்புகோலிவுட்

ஒரு குழந்தையை தத்தெடுக்க லாரன்ஸிடம் உதவி கேட்ட பிக்பாஸ் காஜல்!

  | November 05, 2019 14:21 IST
Kajal

துனுக்குகள்

 • பிக்பாஸ் சீசன் 1ல் பேட்டியாளராக பங்கேற்றவர் இவர்
 • காஜல் ஒரு குழந்தையை தத்தெடுக்க லாரன்ஸிடம் உதவி கேட்டுள்ளார்
 • இவர் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர்
பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் காஜல் பசுபதி குணசித்திர வேடங்களிலும் நடித்து கவனம் பெற்றவர். இவர் கடந்த பிக்பாஸ் முத்ல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று கலவையான விமர்சனங்களை பெற்றார்.
 
இவர் நடன இயக்குநர் சாண்டியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பர விவாகரத்து பெற்று தற்போது தன் தாயுடன் வசித்து வருகிறார்.
 
எப்போதும் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் காஜல் சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு அடிக்கடி குரல் கொடுத்து வருகிறர். இந்நிலையில் காஜல் தான் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புவதாகவும், அதற்கு உதவும்படியும் இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸிடம் ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
   
அதில் அவர் குறிப்பிட்டுள்ளது, மாஸ்டர் 'உங்கள் தொடர்பு எண் தவற விட்டுவிட்டேன். நான் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறேன். வாழ்க்கை ஒரு குழந்தையில்லாமல் முழுமையடையவில்லை. குழந்தை தத்தெடுப்பது இந்த காலத்தில் எளிதான காரியமும் அல்ல.ஒரு குழந்தையைத் தத்தெடுக்க உங்களது உதவி தேவை. அந்தக் குழந்தையின் தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடியும். இந்த உதவியை நீங்கள் எனக்கு செய்தால் நன்றாக இருக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com