முகப்புகோலிவுட்

“நியாயமே இல்லாத மரணம்”! பிக்பாஸ் கவின் உருக்கம்!

  | October 30, 2019 13:09 IST
Sujith Dead News

துனுக்குகள்

 • நேற்று காலை சுஜித் ஆழ்துளை கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டான்
 • பிக்பாஸ் கவின் சுஜித் மரணத்திற்கு இரங்கள்
 • பல்வேறு அரசியல் தலைவர்கள் சுஜித்தின் மரணத்திற்கு இரங்கள் தெரிவித்தனர்
இந்தியா முழுவதும் தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகிக்கொண்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு தீபாவளியை புரட்டி போட்டது 2வயது சிறுவன் சுஜித்தின் மரணம்.

திருச்சி, மனப்பாறை அடுத்துள்ள நடுகாட்டுபட்டி கிராமத்தில் கடந்த 25ம் தேதி மாலை 2வயது சிறுவன் சுஜித் நீண்ட ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறுக்குள் தவறி விழுந்தான்.

அவனை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்தது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவெங்கும் ஊடகங்களின் வாயிலாக சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் காட்டுத்தீயாய் பரவியது. ஒட்டு மொத்த இந்திய மக்களும் சுஜித் நல்லபடியாக மீண்டு வரவேண்டும் என பிராத்தனை செய்தார்கள்.
 
மாநில பேரிடர் மீட்புக்குழு, தேசிய பேரிடர் மீட்புக்குழு உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட மீட்பு குழுனர் சுஜித்தை மீட்கும் பணியில் களம் இறங்கினர். பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை கொண்டு மீட்பு பணி நடந்தது. சுமார் நான்கு நாட்கள் நடந்த மீட்பு பணியில் சுஜித் நிச்சம் உயிருடன் மீட்கப்படுவான் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நான்காவது நாள் சிறுவன் சுஜித் உயிரற்ற உடலாக மீட்கப்பட்டான். ஒட்டு மொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்திய அச்சிறுவன் இந்த சமூகத்தின் முன் பல்வேறு கேள்விகளை முன்வைத்துவிட்டு சென்றிருக்கிறான்.
 
பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் செய்வாய் கிரக்கத்திற்கு ராக்கெட் விடத்தெரிந்த நம் அறிவியலுக்கு 80அடி ஆழத்தில் விழுந்த குழந்தையை மீட்க பயன்படாதது வேதனையின் உச்சம். சுஜித்தின் மரணத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் அஞ்சலியையும், அனுதாபங்களையும் தெரிவித்தனர்.  இந்நிலையில் பிக்பாஸ் போட்டியில் பெரும்பாண்மையான ரசிகர்களின் கவனத்தை பெற்ற கவின் சுஜித்தின் மரணம் நியாயமே இல்லாத மரணம் என தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எங்களை மன்னித்துவிடு சுஜித் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவு அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
உண்மைதான் நாம்தான் இநத் சமூகம், இந்த சமூகத்தின் இயலாமையில்தான் சுஜித்தை இழந்து நிற்கிறோம்.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com