முகப்புகோலிவுட்

“பிக்பாஸ் 3”-ல் நான் இல்லைனா கதையே இல்லை! சீறும் மீரா மிதுன்! வைரலாகும் வீடியோ!

  | October 17, 2019 20:39 IST
Meera Mitun

துனுக்குகள்

 • மீரா மிதுன் பிக்பாஸ் போட்டியில் பங்கு பெற்று வெளியேறியவர் இவர்
 • தொடர்ந்து சர்ச்சைக்குறிய கருத்துகளை வெளியிட்டு வருகிறார் இவர்
 • அக்கினி சிறகுகள் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் இவர்
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேரிய மீராமிதுன் தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில் இரண்டு படங்களில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டார். இதனை அடுத்து அவர் அது குறித்து தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு வருகிறர். இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க பேசப்பட்டவற்றை இன்னும் வழங்காமல் இருப்பதாக தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது,
 
“பிக்பாஸ் முடிந்த பிறகு எனக்கு சேற வேண்டியதை நீங்கள் இன்னும் எனக்கு வழங்கவில்லை. நான் நேர்மையான முறையில் உங்களுடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன். நீங்கள் இவ்வாறு செய்தால் நான் எப்படி உங்களோடு பயணிக்க முடியும். உங்களுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் நான் இயக்கி வந்தேன் என்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன். இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் நியமித்த ஊழியர் ‘நீங்கள் எங்க வேணும்னாலும் போங்க. என்ன வேணும்நாளும் பண்ணுங்க” என்று பேசுகிறார். இது சரியான அணுகுமுறை கிடையாது. நாம் அனைவரும் படித்தவர்கள். யாரும் படிக்காதவர்கள் இல்லை. ஆகையால் இங்கு என்ன நாடகம் போய்க்கொண்டிருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள ஒரு பிரபலத்தை எப்படி மதிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்வது அவசியம். நான் மீண்டும் உங்களுடன் நேர்மையாகவே பயணிக்க விரும்புகிறோன் எனக்கு சேரவேண்டியதை காலம் தாழ்த்தாமல் கொடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஏற்கனவே காலம் கடந்து விட்டது. இன்னும் நீங்கள் கால தாமதப்படுத்தினால் நான் என்னுடைய வழியில் அதை பெறவேண்டி இருக்கும். மீரா மிதுன் இல்லை என்றால் பிக்பாஸ் 3ல் கதையே இருந்திருக்காது. இனிமேல் என்னால் பொருமையாக இருக்க முடியாது எனக்கு வந்து சேர வேண்யது உடனடியாக வந்து சேர வேண்டும்”. என கூறியிருக்கிறார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com