முகப்புகோலிவுட்

பாவாடை தாவணியில் அசத்தல் போட்டோவை வெளியிட்ட பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்!

  | November 11, 2019 16:44 IST
Big Boss Sakshi

துனுக்குகள்

  • பிக்பாஸ் போட்டிக்குபின் அனைவருக்கும் அறிமுகமானவர் சாக்ஷி
  • டெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர்
  • அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர்
தமிழ் திரையுலகில் “காதலும் கடந்து போகும்”, “காலா", “விஸ்வாசம்” உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றவர் சாக்ஷி அகர்வால்.
 
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிந்த பீக்பாஸ் போட்டியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற இவர் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளும் சிக்கி போட்டியில் இருந்து வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் வெளியேறினார்.  
 
பிக்பாஸ் போட்டிக்கு பிறகு இவர் தற்போது சின்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெடி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்து வருகிறார். படவாய்ப்புகள் ஒரு பக்கம் வந்துக்கொண்டிருக்க, அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைதங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் கவர்ச்சி போட்டோவாக வெளியிட்டு வந்த அவர் சமீபத்தில் பாவாடை தாவணி அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அவரது ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்