முகப்புகோலிவுட்

ரசிகரை கட்டிபிடித்து வாழ்த்து கூறிய லாஸ்லியா – வைரலாகும் வீடியோ!

  | November 09, 2019 16:34 IST
Bigboss 3

துனுக்குகள்

  • பிக்பாஸ் கொண்டாட்டம் நடந்து வருகிறது
  • லாஸ்லியா பிக்பாஸ் போட்டியின் இறுதி வரை விளையாடினார்
  • இந்த போட்டியில் முகெயின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்
தனியார் தொலைக்காட்சியில் சமீபத்தில் நடந்த பிக்பாஸ் போட்டி முடிந்து நீண்ட நாட்கள் ஆகியும் இன்னும் அதில் பங்குபெற்ற பிரபலங்களில் செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கிறது.
 
இந்த போட்டியில் பெரும்பான்மையான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த போட்டியாளர்கள் என்றால் அது லாஸ்லியா, கவினதான். இவர்கள் போட்டியில் இருந்து வெளியே வந்தாலும் கூடு இவர்களை பற்றிய செய்திகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அவர்களது ரசிகர்கள். கவினக்கு ஒரு பக்கம் ஆர்மி உருவாகி ஆட்டிவாக இருக்கிறார்கள். அதே போல் லாஸ்லியாவியின் ஆர்மி படையும் தங்கள் தலைவி குறித்த செய்திகளை அவ்வப்போது பதிவிட்டு டிரெண்டாக்கி வருகிறார்கள்.
 
சமீபத்தில் பிக்பாஸ் கொண்டாட்டம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது அப்போது லாஸ்லியாவும், கவினும் ஒன்றாக இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. அதேபோல் தற்போது லாஸ்லியாவின் ரசிகர்கள் ஒருவர் லாஸ்லியாவை ஓவியமாக வரைந்து லாஸ்லியாவிடம் கொடுத்துள்ளார். அப்போது "அக்கா ஒரு ஹக்" என அவர் கேட்க லாஸ்லியாவும் கட்டி அனைத்து அவருக்கு வாழ்த்தும் நன்றியையும் கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்