முகப்புகோலிவுட்

BIGBOSS ரம்யாவுக்கு கல்யாணம்! வாழ்த்து சொன்ன பிரபலங்கள்!!

  | September 18, 2019 11:44 IST
Bigboss Ramya

துனுக்குகள்

 • நாடக நடிகர் சத்யா என்பவரை திருமணம் செய்துள்ளார் இவர்
 • கடந்த ஆண்டு நடந்த பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டார் இவர்
 • இவருடைய திருமணத்திற்கு பிக்பாஸ் நண்பர்கள் பலரும் வாழ்த்து கூறினர்
கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான, 'பந்தயம்' படத்தின் மூலம் பின்னணி பாடகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் என்.எஸ்.கே.ரம்யா. , வேட்டைக்காரன், யான், பிரியாணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார். இளையராஜா, ஹரிஸ் ஜெயராஜ், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட முன்னணி இசை அமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். 

தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பாடல்களை பாடி இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு தனியார் தொலைக்கட்சியில் நடந்த பிக்பாஸ் போட்டியில் போட்டியாளரக கலந்துக்கொண்டு கலவையான விமர்சனத்தை பெற்றார். பின்னணி பாடகியான இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார். பின் கருத்து வேறுபாடு காரண்மாக இருவரும் பரஸ்பர விவாகரத்துப்பெற்று பிரிந்தனர். இந்நிலையில் சின்னத்திரையில் கதாநாயகனாக நடித்து வரும் சத்யா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருடைய திருமணத்தில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com