முகப்புகோலிவுட்

பிக்பாஸ் மதுமிதாவுக்கு ஆதரவாக களம் இறங்கிய காமெடி நடிகர்!

  | September 10, 2019 17:27 IST
Madhumitha

துனுக்குகள்

  • கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் போட்டியில் இருந்து விலகினார் இவர்
  • டேனியல் இவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்
  • சமீபத்தில் இவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ‘பிக்பாஸ்' நிகழ்ச்சிதான் தற்போதைய ஹாட் டாக்காக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்ட மதுமிதா வெளியேறி ய நாளில் இருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் பற்றி அவ்வப்போது சில கருத்துகளையும் கூறி வருகிறார். இது பிக்பாஸ் ரசிகர்கடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
 
சமீபத்தில் சம்பளம் தொடர்பாக கிண்டி காவல் நிலையத்தில் மதுமிதா மீது தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் புகார் ஒன்றையும் அளித்திருந்தது. இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து அதற்கான விளக்கத்தை கொடுத்தார் மதுமிது.
 
இவ்வாறு தொடர்ந்து ஊடகங்களின் வெளிச்சத்திற்கு வந்து செல்கிறார் மதுமிதா. சமீபத்தில்  நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பிக்பாஸ் வீட்டில் தனக்கு நடந்தது என்ன என்பதை விலாவாரியாக விளக்கினார் மதுமிதா. அப்போது பிக் பாஸ் வீட்டில் தன்னை சக போட்டியாளர்கள் கேங் ராகிங் செய்ததாகவும், கையை வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதற்கு பிக் பாஸ் வீட்டிலிருந்த சக போட்டியாளர்கள்தான் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
 
இந்நிலையில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும், நகைச்சுவை நடிகருமான டேனியல் மதுமிதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்த தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதுமிதாவின் கைக்கட்டை அகற்றி எடுக்கப்பட்ட புதிய புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், ‘இதுதான் மதுமிதாவுக்காக என்னை பேச வைத்தது' என்று கருத்து பதிவிட்டுள்ளார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்