முகப்புகோலிவுட்

புதிய கெட்டப்பில் மிரட்டும் பிக் பாஸ் கவின்..!வைரலாகும் புகைப்படங்கள்..!

  | April 09, 2020 16:39 IST
Kavin

கவின் தற்போது ‘லிஃப்ட்’ என்ற த்ரில்லர் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு தழுவிய 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சினிமா பிரபலங்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றியும் இந்த பூட்டுதலின் போது அவர்கள் எவ்வாறு நேரத்தை செலவிடுகிறார்கள் என்பதையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஒரு சில வீட்டிலேயே தங்கள் தலைமுடிகளை தாங்களாகவே வெட்டிக்கொள்கின்றனர். சமீபத்தில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கூட தனது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவிடம் ஹேர்கட் செய்து கொண்ட வீடியோவை வெளியிட்டார். 

இந்நிலையில், தலைமுடியையும் தாடியையும் வெட்டாமல்  வளர்த்துக் கொண்ட பிக் பாஸ் பிரபலமான கவினின் புகைப்படம் தற்போது செம வைரலாகிவருகிறது. தனது புதிய தோற்றத்தின் இரண்டு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவின், “ "நான் தனிமைப்படுத்தலால் பாதிக்கப்படுகிறேன்..!" என கூறியுள்ளார். அவரது இந்த புதிய முரட்டுத்தனமான தோற்றம், அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

As i am suffering from quarantine.. !

A post shared by Kavin M (@kavin.0431) on

ஏற்கனவே ‘நட்புன்னா என்னனு தெரியுமா' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ள கவின், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, தற்போது மீண்டும் ஹீரோவாக ‘லிஃப்ட்' என்ற த்ரில்லர் திரைப்படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இப்படத்தில் ‘பிகில்' நடிகை அம்ரிதா அய்யர் நடிக்கிறார். இப்படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com